கணவர் ஒருவர், மனைவி சீமந்தம் விழாவில், அங்கு வந்திருந்த உறவினர் முன்னிலையில் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் எந்த நாட்டில் அரங்கேறியது என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவில் ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிறது. இருப்பினும் அந்த வீடியோ நம்மை திடுக்கிட வைக்கிறது. அதில் வளைகாப்பு விழா ஆரம்பித்ததும் கர்ப்பமாக இருக்கும் அவரின் மனைவி அழகான பிங்க் நிற ஆடையில் அமர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் கணவன் கையில் மைக்கை எடுத்து பேசிய போது, எனது வக்கீலான இவரிடம் முக்கியமான ஆதாரம் ஒன்றுள்ளது அதை விருந்தினர்களாகிய உங்களிடம் காண்பிக்கிறேன். உங்களுக்கெல்லாம் நான் அப்பாவாகப்போகிறேன் என்பது மட்டும் தான்தெரியும் ஆனால், தெரியாத ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது.
என்னவென்றால் என் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா நான் இல்லை. இவர் தான் அப்பா என்று கூறி ஒருவரின் கையை பிடித்து காண்பித்தார். இதையடுத்து அமைதியாக இருக்குமாறு கூறிய மனைவியிடம் ஒரு வீடியோவை காட்டுகிறார். அதில் தன் மனைவி அவரின் காதலனுடன் படுக்கையில் இருந்தது தெரிந்தது. இந்நிலையில் நான் இங்கிருந்து போகிறேன் என்று சென்ற கணவனை மனைவி கெஞ்சி கொண்டே செல்கிறார். இதையடுத்து மனைவியின் காதலனை உறவினர்கள் தாக்குக்கின்றனர். இந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.