Categories
உலக செய்திகள்

மனைவிக்கு பயந்து… ”தலைமறைவு வாழ்க்கை” ஓடி ஒழிந்த கணவன் … அப்படி என்ன நடந்தது ?

முன்னாள் மனைவியின் கொடுமைக்கு பயந்த கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். 

ஜெர்மனியில் பெண் ஒருவர் அவருடைய கணவனை அடிப்பது சம்பந்தமான காட்சிகள் காமெடி படங்களில் வருவதைப்போல நிஜத்திலும் அரங்கேறியுள்ளது. நிஜமாகவே ஒரு பெண் தன் கணவனை அடித்து துன்புறுத்தும் விஷயம் சமுதாயத்தில் நடக்கிறது என்ற ஒரு உண்மையை இந்த கதை விவரிக்கிறது. இதில் கற்பனைக்காக டாமி-மியா என்ற பெயருள்ள தம்பதியினரை வைத்துக் கொள்வோம். டாமியை சந்தித்து மியா பேசும் போது தன்னுடைய கணவர் தன்னை அடித்து துன்புறுத்திய கதையை கூறி அழுதுள்ளார்.

இதனால் அவர் மீது பரிதாபப்பட்ட டாமி, மியாவை திருமணம் செய்துகொண்டு அவர் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராதபடி பார்த்துக் கொள்வேன் என்று உறுதி கூறியுள்ளார். இதையடுத்து இவர்களின் வாழ்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விடுமுறைக்காக ஹோட்டலுக்கு சென்று இவர்கள், அங்கு தங்களுடைய எதிர்பார்ப்புகளை ஹோட்டல் நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்று கூறிய மியா அந்த ஹோட்டல் மேலாளரை திட்டும்படி கூறியதுடன், அந்த ஹோட்டலுக்கு பணம் கொடுக்க கூடாது என்றும் டாமியிடம் கூறியுள்ளார். ஆனால் டாமி அந்த மேலாளரை திட்ட விரும்பவில்லை.

எனவே காருக்குள்ளேயே உட்கார்ந்து கொண்ட டாமியை, மியா காரில் ஏறி அவரின் தலையில் அடித்திருக்கிறார். ஆனால் டாமி அதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். இதேபோன்று டாமியை அவரது மனைவி பலமுறை அடித்து காயப்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு துன்புறுத்தியுள்ளார். இது மாதிரியான விஷயங்கள் டாமியின் வாழ்க்கையில் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் இதுபோன்று நடக்கிறதாம். மெக்சிகோவில் மட்டும் 25 சதவீதம் ஆண்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நைஜீரியா மற்றும் கானா போன்ற நாடுகளிலும் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கிறதாம்.

தற்போது ஜெர்மனியில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உதவும் வகையில் தொலைபேசி எண் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த கதையின் நாயகன் டாமி , மியாவை பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணுடன் வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வருகிறார். மேலும் தன்னைப்போன்ற கொடுமையை அனுபவித்த ஆண்களுக்கு உதவுவதற்காக இவர் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

 

Categories

Tech |