கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் இளம்பெண்ணை பல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதன் காரணமாக அப்பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளதாக அவரது கணவர் நினைத்துள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அறிவுறுத்தலின்படி பேய் ஓட்டும் மந்திரவாதியிடம் மனைவியை, அவரது கணவர் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மந்திரவாதி பெண்ணின் கணவரை வெளியே இருக்கும்படி தெரிவித்துள்ளார். அதன்பின் அவர் எப்படி பேய் ஓட்டுகிறார் என பார்ப்பதற்காக மந்திரவாதி அறையின் ஜன்னலை எட்டிப் பார்த்துள்ளார்.
இந்நிலையில் மந்திரவாதி அவரது மனைவியின் தலையை தனது மடியில் வைத்து ஊதுபத்திகளை மூக்குக்கு அருகே காட்டியதும் அவர் மயக்கமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மனைவியிடம், மந்திரவாதி தவறாக நடக்க முயன்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின் உடனே அறைக்குச் சென்று மனைவியை மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேய் பிடித்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மந்திரவாதியைக் கைது செய்தனர்.