உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயூ என்ற நதியானது கங்கையின் 7 துணை நதிகளில் ஒன்றாக உள்ளது. இது இந்த மக்களால் புனிதமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயோத்தியில் உள்ள நதியில் குளித்த மனைவிக்கு முத்தம் கொடுத்ததற்காக கணவனை அடித்து உதைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனது மனைவிக்கு அந்த நபர் முத்தம் கொடுக்கிறார். இதனை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அந்த நபரை இழுத்துச் சென்று அடித்து உதைத்தனர்.
மேலும் அயோத்தியில் இதுபோன்ற அசிங்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று வடமொழியில் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தனது கணவனை மீட்க போராடிய மனைவியின் கண்முன்னே இளைஞர்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அயோத்தியில் சரயு நதியில் குளிக்கும்போது மனைவிக்கு முத்தம் கொடுத்தார் ஒரு இளைஞர். இன்றைய ராம பக்தர்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்கவும். மென்டல் பக்தர்கள். இந்து ராஷ்ட்ரம் அமைந்தால் இவர்கள்தான் நம்மை ஆளுவார்கள். pic.twitter.com/3CN6z1P8lV
— SaveTheNation/தேசம் காப்போம் (@niayayakkural) June 22, 2022