Categories
உலக செய்திகள்

மனைவிக்கு வரிவிலக்கு…!!! பிரிட்டிஷ் நிதி அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி…!!

பிரிட்டிஷ் நாட்டின் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியும் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு விழுக்காடு பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 7000 கோடி ஆகும். அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை பெறாததால் வெளிநாட்டில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு பிரிட்டிஷ் விதிப்படி அவர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்நிலையில் அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறாமல் பிரிட்டனில் வசிப்பது மற்றும் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்தாதது உள்ளிட்டவை நிதியமைச்சர் ரிஷிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் அமைச்சராக பொறுப்பேற்ற போதே தன்னுடைய சொத்து விபரங்கள் குறித்து அனைத்தையும் தெரிவித்து விட்டதாகவும் தேவைப்பட்டால் அதனை மறுஆய்வு செய்து கொள்ளுமாறும் அவர் அதில் கூறியுள்ளார்.

Categories

Tech |