வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி(30) என்பது தெரியவந்தது.
இவர் மணப்பாறையில் செயல்படும் தனியார் நிறுவனர் காலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியின் மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்றது. அதன் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே பாலசுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.