மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வயலோகம் பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது நண்பரான முரளி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பணம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முருகேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசன், முரளி, சிவா, சரவணன் ஆகிய 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்த முருகேசனின் மனைவிக்கு கடந்த வாரம் வளைகாப்பு விழா நடந்தது குறிப்பிடதக்கதாகும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.