Categories
தேசிய செய்திகள்

மனைவியிடம் கணவர் கட்டாயமாக உறவு வைத்தால்… பாலியல் வன்கொடுமை ஆகாது…. சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட்டு…!!!

மனைவியின் விருப்பத்திற்கு எதிராக பாலியல் உறவு இருந்தாலும் அது பலாத்கார குற்றம் அல்ல என்று சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் திருமண உறவு பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான தீர்ப்பு இந்தியாவின் நீதி அமைப்பில் மிகப்பெரிய வீழ்ச்சி என ஹைகோர்ட் கூறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான சில நாட்களுக்கு பிறகு அவரது கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், கணவர் பெண்ணின் விருப்பம் இன்றி தொடர்ந்து உறவில் ஈடுபடுவதாகவும் கூறி புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. கணவனுக்கும் சட்டபூர்வமாக திருமணமான மனைவிக்கும் இடையே பாலியல் உறவு என்பது வலுக்கட்டாயமாக இருந்தாலும், மனைவியின் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் அது பாலியல் பலாத்கார குற்றம் அல்ல என்று சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. திருமண உறவு பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான தீர்ப்பு இந்தியாவின் நீதி அமைப்பில் ஒரு வீழ்ச்சி என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |