Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் சாப்பாடு கேட்ட கணவன்… சண்டையிட்ட மனைவி, மாமியார்… ஆத்திரமடைந்த கணவன்… செய்த கொடூர செயல்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் அருகே இருக்கின்ற செருகளத்தூர் மாதா கோவில் தெருவில் 50 வயதுடைய பாஸ்டின் மற்றும் அவரின் மனைவியான லைசாமேரி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது லைசாமேரி கோபமடைந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். அதன்பிறகு அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு கணவன்-மனைவி இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாஸ்டின் தனது மனைவியிடம் உணவு கேட்டுள்ளார்.அப்போது அவரின் மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகிய இருவரும் சேர்ந்து அவரிடம் சண்டை இட்டுள்ளனர். அதனால் மிகுந்த கோபம் அடைந்த பாஸ்டின் மனைவி மற்றும் மாமியாரை இரும்புக்கம்பியால் பலமாக தாக்கியுள்ளார்.அதில் பலத்த காயமடைந்த இரண்டுபேரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி பாஸ்டின் மனைவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |