உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் இருந்த கணவரை மனைவி செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் தினேஷ் கோபால் என்பவர் ஐசியூ பிரிவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் அவர் ஓட்டல் அறையில் தங்கி இருப்பதாக மனைவி நீளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.அதனால் அவர் தனது மகன் மற்றும் மகள் உறவினர்களுடன் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஹோட்டல் அறையில் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்த மனைவி கோபத்தின் உச்சத்திற்கு சென்று தன்னுடைய செருப்பை கழற்றி கணவரையும் காதலியையும் கடுமையாக தாக்கினார். கணவன் எவ்வளவு கெஞ்சியும் மனைவி இதயம் இறங்கவில்லை. கள்ள காதலியின் கணவரை போன் மூலம் அழைத்து அவரிடம் தகவலை தெரிவித்தார். மனைவியடிக்கும்போது தினேஷ் குழந்தைகளிடம் காப்பாற்றுங்கள் எனக் கூறிய நிலையில் நீங்கள் எங்கள் அப்பா என கூறுவது கேவலமாக உள்ளது என்று குழந்தைகள் கூறியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.