Categories
தேசிய செய்திகள்

மனைவியிடம் டியூசன் படிக்க வந்த மாணவி….. காதலிப்பதாக சொன்ன கணவன்….. பின் நடந்த கொடூரம்….!!!!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பரின்கியா பகுதியில் தயானதீசட்னா(27) என்பவரின் மனைவி வீட்டில் டியூசன் எடுக்கிறார். அந்த டியூசனில் படித்த 11ஆம் வகுப்பு மாணவியிடம் தயானதீசட்னா காதலிப்பதாக கூறி தனது பாலியல் இச்சையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி, ஒரு கட்டத்தில் டியூசனுக்கு வருவதை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் மாணவி பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது தயானதீட்சனா மாணவியை மறித்து வலுக்கட்டாயப்படுத்தி ஆள் அரவமற்ற கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை மாணவியின் மீது ஊற்றி உயிருடன் தீயிட்டு கொன்றார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தயானதீட்சனாவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்

Categories

Tech |