தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாராயணமடம் தெருவில் கூலி தொழிலாளியான ரவீந்திரன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரவீந்திரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ரவீந்திரன் தனது மனைவி செல்வராணியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என ரவீந்திரன் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ரவீந்திரன் விருதுநகர்- அருப்புக்கோட்டை தலையில் இருக்கும் மேம்பாலத்தின் மின்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.