Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவியின் ஆபாச படம்…. கணவனின் அருவருப்பான செயல்…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை…!!

மனைவியின் ஆபாச படத்தை  இணையதளத்தில் விட்ட கணவனுக்கு  நீதிமன்றம் ஒரு வருடம்  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் திவாகர். 2006-ம் ஆண்டு இவருக்கும் , கம்ப்யூட்டர் என்ஜினீயரான பெண் ஒருவருக்கும் திருமணம் ஆனது. அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் சென்னையில் வசித்தனர்.பெண் என்ஜினீயர் 2007ஆம் ஆண்டு சென்னை சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு அளித்தார் .மனுவில் அவர் கூறியதாவது,”எனது கணவர் நான் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் என்னை தவறாக படங்கள் எடுத்தார்.

அப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு உல்லாசமாக இருக்காலாம் என்று குறிப்பிட்டும் என் செல்போன் நம்பரையும் வெளியிட்டார் .இதைத்தொடர்ந்து திருச்சியை சேர்ந்த ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை கடுமையாக பேசிவிட்டு இணைப்பை  துண்டித்தேன்.பின்பு அந்த நபர் கூறிய இணையதள முகவரியில் பார்த்தபோது எனது கணவர் என்னை ஆபாசமாக எடுத்த படங்களை பதிவேற்றபட்டிருந்தது  அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதனால் சாமுவேல் திவாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இது குறித்து சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிபதி ராஜாகுமார் முன் விசாரணைக்கு வந்தது.இவ்வழக்கில் 12 சாட்சிகளும்  சாட்சியம் அளித்தது .இந்த வழக்கில் நான் ஆஜராக மாட்டேன் ஏனென்றால் சாமுவேல் திவாகர் உடன் எனக்கு விவாகரத்து நடந்து விட்டது எனக் கூறினார். பின்னர் அரசு தரப்பில் வக்கீல் மேரி  ஆஜராகி 67 ஐ டி சட்டப்படி ஆபாச படங்களை காட்டி உணர்வுகளைத் தூண்டும் வகையில் இருந்தது தண்டனை கூறியதாகும் . எனவே புகார்தாரர் புகார் அளிக்கவில்லை என்றாலும் ,அந்த படங்கள் உண்மையானது இதை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வாதாடினார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜாகுமார் தீர்ப்பளித்தார்.  தீர்ப்பில் பெண்கள் வன்கொடுமை பெண்ணை ஆபாசமாக சித்தரித்தல் ஆகியவை 67 ஐ டி சட்டம் பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சாமுவேல் திவாகருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் , ரூ 12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.இதையடுத்து கொரோனா நோய்தொற்று காலத்திலும் உரிய முறையில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தர உழைத்த சிபிசிஐடி சைபர் கிரைம் இருக்கும் , அரசு தரப்பு வக்கீலுக்கும்  , நீதிபதிக்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர்

Categories

Tech |