கர்நாடக மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர், மனைவி இறந்த துக்கத்தில் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவி பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபால் என்பவரின் மனைவி ஜெயா. இந்த தம்பதிக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன. இதில் கடந்த ஜூன் மாதம் ஜெயாவுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு கருப்பு பூஜை பாதிக்கப்பட்ட தன் காரணமாக ஜூன் 6ஆம் தேதி உயிரிழந்தார். மனைவியின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத கணவர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். சமீபத்தில் அவரது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் கோபால் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போது முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவியின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு பின்னர் குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து தானும் விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கோபால் வீட்டில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை.
என்னுடைய இறுதி சடங்குகளை செய்வதற்கு ரூபாய் 20 ஆயிரம் பணத்தை வைத்துள்ளேன். அதை வைத்து அனைத்தையும் செய்யுமாறு கூறியுள்ளார். கோபால் வீட்டிலிருந்த கடிதம் மற்றும் பணத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது பள்ளிகள் திறக்க உள்ளதால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருந்தனர். ஆனால் இப்படி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர் என்று வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.