போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மனைவியின் உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கட்டாரபட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பம்மாள் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முனியாண்டி தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் சேர்ந்த சிலருடன் சேர்ந்து முனியாண்டி தனது மனைவியின் உடலை சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டார்.
இதுகுறித்து அறிந்த அத்திப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சாப்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தகவல் தெரிவிக்காமல் சுப்பம்மாளின் உடலை எரித்த குற்றத்திற்காக முனியாண்டி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கருப்பாயி, ஈஸ்வரன், செல்வமுனியாண்டி, தங்கமுடி ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.