ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருடைய மனைவி ரஞ்சிதா. பிரசாந்த் குடி போதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் வந்து சண்டை போடுவாராம். மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் மனைவி ரஞ்சிதாவிற்கு கிட்னியில் கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுவதாக கூறி பின்னர் அவரை கிட்னியில் இருக்கும் கல்லை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பிரசாந்த் ஆந்திராவிற்கு சென்று வேறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நான்கு வருடங்கள் கழித்து சமீபத்தில் வயிற்று வலிக்காக ஸ்கேன் செய்தபோதுதான் தனக்கு ஒரு கிட்னி மட்டுமே இருப்பதை அறிந்த ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துளார். மேலும் காவல்துறையினர் பிரசாந்தி தீவிரமாக தேடி வருகின்றனர் செய்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.