Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியின் சேலையாலே தூக்கு…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் அருகே உள்ள இ.பி.ஆபீஸ் ரோடு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு நிவேதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நிவேதா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து சீனிவாசன் பலமுறை நிவேதாவை வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சீனிவாசன் மனைவியின் சேலையிலேயே வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |