Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் தங்கை மீது காதல்…. வசியம் செய்த மந்திரித்த நீரை ஊற்றி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் செட்டி வட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ராஜேஷ் தனது மனைவியின் 19 வயது தங்கை மீது காதல் கொண்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி இரவு நேரத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த மனைவியின் தங்கையை வழிமறித்து அவர் மீது திரவம் ஒன்றை வீசியுள்ளார். அதனை ஆசிட் என நினைத்த அந்தப் பெண் அலறியடித்து கூச்சலிட்டார்.

அதனால் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மீது பட்டது ஆசிட் இல்லை என்று கூறினர். இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் ராஜேஷ் கைது செய்து விசாரித்தனர். அப்போது மனைவியின் தங்கையின் மீது காதல் வசப்பட்டு அவரை மயக்கி வசியம் செய்ய மந்திரித்த தண்ணீரை ஊற்றியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |