Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…. கணவரின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள புல்லல் எம்.ஜி.ஆர் நகர் 2-வது தெருவில் எலக்ட்ரீசியனான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவனின் முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வெண்ணிலா என்ற பெண்ணோடு இளங்கோவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இளங்கோவனுக்கு வெண்ணிலாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த இளங்கோவன் வீட்டில் இருந்த கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன்பிறகு நடந்தவற்றை கூறி இளங்கோவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெண்ணிலாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |