Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியின் பிரிவால்…. உயிரை மாய்த்துக்கொண்ட தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

மனைவி விட்டு சென்றதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள செங்கப்பள்ளி பகுதியில் வினோத் (எ) சண்முக மூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கண்ணியம்மாள் என்ற மனைவியும் நிஷாலினி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கண்ணியம்மாள் கோபித்துகொண்டு மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வினோத் மீண்டும் கண்ணியம்மாளை தன்னுடன் வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த வினோத் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |