திமுக பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவிபரமேஸ்வரி கடந்த 6 மாதங்களாகவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின், ஆ.ராசாவின் உயர்விலும், தாழ்விலும், நெருக்கடிகளும், சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடன் இருந்தவர், அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவருடைய மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களை பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.