Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்….. பிரபல ரவுடி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரபல ரவுடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள வரதராஜபேட்டை பகுதியில் பிரபல ரவுடியான பிரசாந்த்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 19-ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பிரசாந்த் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை அடுத்து பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு இதே நாளில் பிரசாந்தின் மனைவி குளோரி குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் தனது மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளிலேயே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |