கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடைய மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தன்னுடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த குடும்ப நீதிமன்றம் இவர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கியது.
ஆனால் இதை எதிர்த்து அந்த பெண்ணின் கணவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவியின் விருப்பம் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடும் கணவனை தண்டிக்க சட்டத்தில் வழி இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம் மனைவியின் விருப்பத்தை மதிக்காமல் அவரை துன்புறுத்துவதும் பாலியல் வன்கொடுமையில் தான் சேரும். எனவே இதுபோன்ற வழக்குகளில் மனைவி விவாகரத்து கோருவதற்கு கணவனின் இந்த நடத்தை வழிவகுக்கிறது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.