கணவன் மனைவி இடையில் யாராவது ஒருவருக்கு விருப்பமில்லாமல் பாலுறவு நடைபெறுவது தொடர்பாக பல்வேறு விதமான வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கபட்ட மனைவி ஒருவர் தன்னுடைய கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில் தன்னுடைய விருப்பம் இல்லாமல் இயற்கைக்கு எதிராக கணவர் தன்னிடம் உடலுறவு வைத்துக் கொண்டதால் அவரை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையானது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியின் வயது 18க்கு கீழ் இல்லாத பட்சத்தில் அவரை கட்டாயப்படுத்தி விருப்பத்திற்கு மாறாக கணவர் உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் இயற்கைக்கு எதிரான முறையில் உடலுறவு தனக்கு ஏற்பட்டுள்ளதால், கணவர் மீது வழக்கு பதிவு செய்தது எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்தனர்.