Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…. கணவரின் மூர்க்கத்தனமாக செயல்….. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அர்ச்சனா கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனா வேலைக்கு சென்று விட்டு பேருந்தில் அரூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டினார்.

இதனால் காயமடைந்த அர்ச்சனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரித்த போது கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகவும், கோபத்தில் அரிவாளால் வெட்டியதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |