முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கீழ்குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான ஆதிமூலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதிமூலத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆதிமூலம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தொழிலாளியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆதிமூலம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.