வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் நேதாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேதாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நேதாஜி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக நேதாஜியின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேதாஜி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.