ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை புது தெருவில் கட்டிட தொழிலாளியான ஸ்ரீதர்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீதரின் உடலை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.