கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்ட உப்பனூர் பகுதியில் கூலி தொழிலாளியான நாராயணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணப்பாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாராயணப்பா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த நாராயணப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாராயணப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.