Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. 2 மகள்களுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஆட்டோ டிரைவர் தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பச்சையப்ப முதலி தெருவில் ஆட்டோ டிரைவரான ஞானவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா, பூஜா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஞானவேல் தனது 2 மகள்களையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் ஞானவேல் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி தனது கணவர் மற்றும் மகள்களை காணவில்லை என எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஞானவேல் மற்றும் அவரது மகள்களை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் மறைமலைநகர் பகுதியில் இருக்கும் வீட்டுமனை பிரிவிலுள்ள தண்ணீர் நிரம்பிய தரைமட்ட கிணற்றில் ஞானவேல் மற்றும் 2 பெண் குழந்தைகளின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 3 பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஞானவேல் தனது குழந்தைகளுக்கு பிஸ்கட், மிக்சர் போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு 2 குழந்தைகளையும் துணியால் தன்னுடன் கட்டிக்கொண்டு ஞானவேல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |