தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குரவைக்குளம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பையாவிற்கும் அவரது மனைவி புவனேஸ்வரிக்கு மிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பையா இலுப்பைகுளம் பேருந்து நிலையம் அருகே வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுப்பையாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.