குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செட்டிவிலை கிராமத்தில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விபின் மது குடித்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து விபின் தாயார் சுகுமாரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபினின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.