காவிரி ஆற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓட்டமெத்தை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அசோக்குமார் தனது மனைவியுடன் பள்ளிபாளையத்தில் உள்ள புதன் சந்தை காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென அசோக் ஆற்றில் மூழ்கி தத்தளித்துள்ளர். இதனை பார்த்த அவரது மனைவி பாத்திமா அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினர் முயன்றும் அசோக்குமாரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரிசல் ஓட்டிகளின் உதவிடன் அசோக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு அசோக்குமாரின் உடல் ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர். இதற்குபினர் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.