பெற்ற தாயை தன் மகன் மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து கொளுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஷாஜகான் பூர் பகுதியை சேர்ந்த ரத்னகுமார்(58) என்ற பெண் சில தினங்களுக்கு முன்பு உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்த பிறகு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ரத்னகுமார் கொடுத்துள்ள மரண வாக்குமூலத்தில், தன்னுடைய மகன் தன் வீட்டை விற்று விடுமாறு கூறினார். எல்லோருக்கும் சமமாக பிரித்து தர வேண்டும் என்று தான் கூறியதை ஏற்காமல் தனது மகன், மருமகள் மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து தனக்கு தீ வைத்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து, ரத்னகுமாரின் மரண வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.