கொரோனாவில் இருந்து தப்பிக்க தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒரே நபரே வாங்கியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் பொது இடங்களில் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகள் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் இருந்து தப்பிக்க ரிச்சர்ட் முள்ஜாடி என்ற நபர், தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியுடன் பயணித்த இருந்த அவர், எங்கே மற்றவர்களுடன் விமானத்தில் பயணித்தால் கொரோனா பரவி விடுமோ என்று நினைத்து மொத்த விமான டிக்கெட்டுகளையும் தானே புக் செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.