Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு….. விரக்தி அடைந்த கணவன்… எடுத்த விபரீத முடிவு..!!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி கஜேந்திர ராவ் (வயது 57)  இவருக்கும் அவரது மனைவி லட்சுமிபாய்க்கும் இடையே சம்பவத்தன்று குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் விரக்தி அடைந்த கஜேந்திரராவ் விஷம் குடித்துள்ளார்.

இதனையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பின் விவசாயி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டரான முரளி என்பவர் கஜேந்திரனின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |