தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிகவும் பிரபலமான வராகவும், வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4-காம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கே கிறிஸ்துமஸ் கொண்டாடிய சூர்யா தற்போது மும்பை சென்றுள்ளார். அங்கு அதிகாலையில் தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் அவர் வாக்கிங் சென்ற புகைப்படம் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை சூர்யா-ஜோதிகா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.