காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தனது மனைவியை அடிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த வாரம் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மனைவியை ஐபிஎஸ் அதிகாரி அடித்து உதைக்கும் காட்சிகளை பார்த்த காவல்துறை உயரதிகாரிகள் தற்காலிகமாக ஐபிஎஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரது மகள் கூறும்போது தனது தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் தன்னை அடிக்க வேண்டும் என்று கலாட்டா செய்ததால் தான் தந்தை அவ்வாறு செய்தார் என்று கூறியுள்ளார். அதே போன்று அவரது மகன் கூறுகையில் எனது தந்தையும் தொலைக்காட்சி நிருபர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள் அவரது மனைவி தனது வீட்டிற்கு வந்த போலீஸ் அதிகாரியிடம் தகராறு செய்தார் என்றும் அதனை படம்பிடித்து ஊடகத்தில் வெளியிட்டதாகவும் கூறினார். இவ்வாறு கருத்துக்கள் பரவி வருவதால் காவல் துறை சார்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.