பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவ குழுவினர் முதலுதவி அடுத்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அவரது கணவர் 48 வயதான இந்த ஜீத் சாந்து என்பவரை போலீசார் கைது செய்தது மட்டுமல்லாமல் அவர் மீது முதல் நிலை கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மரணமடைந்த கமல் ஜிப் சாந்து என்பவருக்கு பதினாறு மற்றும் 21 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் எனவும் அவர்கள் தற்போது உறவினர்கள் அரவணைப்பில் இருக்கின்றனர் எனவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். மேலும் கனடாவில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 88 பெண்கள் அல்லது பெண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலும் குடும்ப வன்முறை மற்றும் ஆண்களே கொலைக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.