கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ராமரெட்டியூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான குப்பன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குப்பன் அடிக்கடி தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோபத்தில் நித்யா தனது மகள்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் மனைவி மற்றும் மகள்கள் பிரிந்து சென்ற வேதனையில் இருந்த குப்பன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்பனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.