Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து சென்ற கணவர்….. இளம்பெண் படுகொலை…. மதுரையில் பயங்கர சம்பவம்…!!

இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள குறவன்குளம் பகுதியில் வேங்கையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து சுந்தரராஜன் பட்டியில் இருக்கும் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்த வேங்கையன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் குறவன்குளத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று காலை வீட்டிற்கு அருகே இருக்கும் சாலை ஓரத்தில் கண்ணம்மாள் அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வேங்கையன் தலைமறைவானதால் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |