Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து சென்ற டாக்டர்…. தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. நெல்லையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பல் டாக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பல் டாக்டரான முகம்மது அப்துல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரோசியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரோசியாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் முகமது அப்துல் அவரை காரில் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் தளபதி சமுத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் முகமது அப்துல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பின் படுகாயமடைந்த ரோசியாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது அப்துலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |