Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியை அழைத்து வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நேசவாளர் காலனியில் தொழிலாளியான நாகராஜன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கல்யாணி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்யாணி அவரது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் கல்யாணியை சமாதானப்படுத்தி நாகராஜன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு பின்புறம் வைத்து நாகராஜன் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நாகராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |