மனைவியை எரித்துக்கொன்று விட்டு நாடகம் ஆடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .
விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த இந்திரா கடையுடன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் .இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்திராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து பணம் கொடுக்கல் வாங்கலால் கொலை செய்யப்பட்டாரா அல்லது அணிந்திருந்த நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனதால் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்தனர் .இந்நிலையில் நடராஜன் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக இந்திராவின் தம்பி வெங்கடேசன் போலீசாரிடம் தெரிவித்தார்.அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக திருக்கோவிலூரில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 தேதி நள்ளிரவில்இந்திராவை பார்க்க வந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் இந்திராவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய நடராஜன் அவரது உடல் மீது துணிகளை போட்டு மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார் .
திருட்டு சம்பவம் போல் தெரிய வேண்டும் என்பதற்காக நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து மனைவி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் . நடராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். ஓய்வெடுக்கும் வயதில் மனைவியை கொன்றுவிட்டு சிறைக் கம்பிகளை எண்ணுகிறார் இந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்.