Categories
மாநில செய்திகள்

மனைவியை காணமுடியாமல்… தவித்த கணவர் தற்கொலை… இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு…!!

இலங்கை தமிழர் ஒருவர் மனைவி மற்றும் மகனை காண முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எருமப்பட்டிக்கு அருகிலிருக்கும் மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வருபவர் 56 வயதுள்ள கூலித்தொழிலாளி மேத்யூஸ். கடந்த 2017 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்ற மேத்யூஸ் 2018 ஆம் வருடத்தில் தமிழ்நாட்டிற்கு  திரும்பியுள்ளார். அதன் பிறகு தன் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மேத்யூஸ், தன் மனைவி மற்றும் மகன் இருவரும் இலங்கையில் வசிப்பதால் அவர்களைக் காண வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால் இவரால் இலங்கை செல்ல முடியாததால் கடந்த சில நாட்களாகவே மனைவியையும் மகனையும் காணாமல் மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மேத்யூஸ் தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டதுடன் ஆம்புலன்ஸ் சேவையை அழைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரை நாமக்கலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |