சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குளத்தில் இளம்பெண் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சாலை பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு அமுதா ராணி என்ற மனைவி இருந்தார். அமுதா ராணி சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளதுள்ளார். இதன் காரணமாக அவர் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அமுதா ராணி கோவிலுக்கு செல்வதற்காக தனது கணவரை அழைத்துள்ளார். ஆனால் அவர் வேலை இருப்பதாக கூறி அமுதா ராணியிடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமுதா ராணி தனியாக கோவிலுக்கு சென்றார். அதன் பின் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய கணவர் அவரை கோவிலுக்கு சென்று தேடிப்பார்த்தார். ஆனால் அங்கு அவரை காணவில்லை. இந்நிலையில் காரைக்குடி பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் கோவிலுக்கு அருகில் குளம் ஒன்றில் அமுதா ராணி சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி காவல்துறையினர் அமுதா ராணியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.