நபர் ஒருவர் 3 காவல்துறையினரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள செயின்ட் ஜஸ்ட் என்ற பகுதிக்கு அருகே உள்ள puy-de-dome என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு ராணுவ காவல் அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டின் கூரையின் மேல் அப்பெண் பிடித்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்க சென்றுள்ளனர்.
அப்போது அந்த பெண்ணின் கணவர் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபர் அவரின் வீட்டை தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனால் வீடு மொத்தமும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இக்கொடூரமான சம்பவத்தை நிகழ்த்திய நபர் பைத்தியம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு GIG-N இல் உள்ள 7 காவல்துறையினர் சென்றுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயின் ஜஸ்ட் மேயர் கூறியுள்ளார்.