கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்ணின் கணவரை வெட்டி கொலை செய்த நபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துர்கா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் வினோத்குமார் பீரோ தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வாசிக்கும் இளநீர் வியாபாரியான முத்துவேல் என்பவர் துர்காவை கிண்டல் செய்துள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட வினோத்குமாரை முத்துவேல் கடந்த 2017-ஆம் ஆண்டு கத்தியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து வேலை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முத்துவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.