ஓசூரில் மனைவியை கொன்றதாக நினைத்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதி பேரிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசராயப்பா இவருக்கு வயது 55 இவர் கரி பிரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் குடும்ப தகராறு காரணமாக இவரை கரி பிரம்மா பிரிந்து சென்றுள்ளார்.தனிமையை உணர்ந்த ஓசராயப்பா தனது அக்கா மகள் ஆகிய வெங்கடலட்சுமியம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் 3 வருடத்திற்கு முன் ஓசராயப்பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் வெங்கடலட்சுமியம்மால் தன் மகன் முருகேசனுடன் நாரிபுரத்திற்கு சென்றுவிட்டார்.
ஒசராயப்பா வெங்கட லட்சுமியை சமாதானம் செய்வதற்காக முருகேசன் வேலைக்கு சென்றதும் அங்கு சென்றுள்ளார் ஆனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றி ஒசரயப்பாவுடன் போக மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஓசராயப்பா அங்கு கிடந்த அரிவாளை எடுத்து வெங்கடலட்சுமியம்மாவின் கண்,தொண்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்,அதிக காயமடைந்த வெங்கடலட்சுமி மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து தனது மனைவி இறந்து விட்டதாக கருதி பயந்து போன ஓசராயப்பா வீட்டிற்கு பின்புறம் சென்று அங்கு உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த வெங்கடலட்சுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.