சென்னை அருகே மனைவியை கொலை செய்து கணவர் நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் புகழ்கொடி(வயது29). இவர் மனைவி சரிதா (21). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தனது ஆட்டோவில் சரிதாவை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடம் கொண்டு வரும் போது கிழே விழுந்ததாக தெரிவித்து மருத்துவமனையில் கணவன் புகழ்கொடி சேர்த்திருக்கிறார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சரிதாவின், அக்கா ஸ்ரீலஷ்மி சரிதா காயத்தில் சந்தேகம் இருப்பதாக ராயபேட்டை மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது பற்றி கண்ணகி நகர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பின், கண்ணகி நகர் போலீசார் சரிதாவின் கணவர் புகழ்கொடியை அழைத்து விசாரனை மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டிருந்த சரிதா இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது கணவன் புகழ்கொடியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்திருக்கிறது.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, புகழ்கொடியின்
மனைவி சரிதா கடந்த 17-ந் தேதி இரவு ஜெகதீசன் என்பருடன் செல்போனில் பேசியிருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரம் அடைந்த கணவன் புகழ்கொடி சரிதாவை தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். தற்போது சரிதா இறந்திருப்பதால் கணவன் புகழ்கொடி மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.